ஒருவர் கேப்டன்... ஒருவர் விளம்பர தூதர்... ஒருவர் ஊக்குவிப்பாளர்

Sekar Tamil
சென்னை:
வேட்டை படத்துக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் போடுது கூட்டணி என்கின்றனர். ஆனால் இது வேற ஒரு தளத்துக்கான கூட்டணிங்க...

அட அது என்ன கூட்டணி என்கிறீர்களா?  இதோ சொல்லிடுவோம். 


மாதவன், ஆர்யா, அமலாபால் மூன்று பேரும் சேர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘வேட்டை’ படத்தில் நடித்திருந்தனர். 


இப்போது இந்த 3 பேரும் மறுபடியும் சேர்ந்து கூட்டணி போட்டு இருக்காங்க. எதுக்கு? இதுக்குதான். சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நடக்க உள்ள  ‘நட்சத்திர பேட்மிண்டன்’ போட்டிக்காகதான் இந்த  3 பேரும் ஒரே கூட்டணியில் இணைஞ்சிருக்காங்க.


‘செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்’ என்ற பெயரில் நடக்க உள்ள இப்போட்டிகளின் இறுதி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடத்த இருக்காங்க.


இதில், சென்னை அணி சார்பில் விளையாடும் வீரர்களின் அறிமுக விழா சென்னையில் நடக்க இந்த அணியில் நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணி விளம்பர தூதர் மாதவன். அணி ஊக்குவிப்பாளர் அமலாபால் என்று மூவரும் ஒரே கூட்டணியாகி இருக்காங்க. 


Find Out More:

Related Articles: