பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் விஷால்
'செல்லமே' திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான விஷால் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது 'கத்தி சண்டை', 'துப்பறிவாளன்' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் விஷால் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவருக்கு திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விஷால் இன்று தனது பிறந்தநாளை, ஏழை எளியோர் பலருக்கு உதவி செய்து கொண்டாடி வருகிறார்.