மீண்டும் இணைந்த ஆர்யா-நயன்தாரா

Sekar Tamil
நடிகர் ஆர்யாவும், நயன்தாராவும்  இணைந்து 'பாஸ் என்ற பாஸ்கரன்', 'ராஜாராணி' உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களிலும் இணைந்து நடித்தனர். இதையடுத்து இருவரும் சேர்ந்து நடிக்காத நிலையில், தற்போது ஒரு புது படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.


'பருத்தி வீரன்' திரைப்பட இயக்குனர் அமீர் அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க போகிறாராம். 


இதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போது படக்குழுவினர் நடத்தி வருகின்றனராம். அதனால் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: