எவ்வளவு விஷயம் இருக்கு... இது எதுக்கு... பொங்கிய சமந்தா...

frame எவ்வளவு விஷயம் இருக்கு... இது எதுக்கு... பொங்கிய சமந்தா...

Sekar Tamil
சென்னை:
பாகற்காய் தின்றால் கசக்கத்தான் செய்யும். சாக்லெட் தின்றால் இனிக்கத்தான் செய்யும். எதுக்கு இந்த பில்டப் என்கிறீர்களா?


வேறு என்ன வதந்திகள் மத்தியில் வாழ்ந்து வரும் சமந்தாதான் டென்ஷன் ஆகியிருக்கிறார். எதுக்கு தெரியுங்களா? இவரோட காதல், கல்யாணம் பலவிதத்தில் பல செய்திகள்... அமைதியின் இருப்பிடமாக இருந்த சமந்தா தற்போது ஒரு பேட்டியில் பொங்கிவிட்டார். 


என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா? சொந்த விஷயங்கள் விவாதத்துக்கு உள்ளாகிறது, இது வருத்தப்பட வைக்கிறது. நாட்டில் எத்தனையோ நல்ல விஷயம் இருக்கும் போது எதற்கு என் சொந்த விஷயத்தை இப்படி பேச வேண்டும். நல்ல விஷயங்களை அதிகமாக பேசுவதுதான் வரவேற்க கூடியதாக இருக்கும்.


தேவையில்லாத விஷயங்களை பேசுவதை விட்டு நல்ல விஷயங்களை பேச ஆரம்பித்தால் எத்தனையோ நல்லது நடக்குமே என்று பிலாசபி பேசி டென்ஷன் ஆகியுள்ளார். அப்ப உண்மையை சொல்லுங்க... உங்க கல்யாணம் எப்போது? அட விடுங்கப்பூ என்கிறீர்களா?


Find Out More:

Related Articles:

Unable to Load More