ரெட் கார்டுக்கு தயாரான தமன்னா

Sekar Tamil
நடிகை தமன்னா தற்போது சுராஜ் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக 'கத்திச்சண்டை' திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த படம் தற்போது இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. 


இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 29-ந்தேதி, விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்த இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் ஒன்று வெளியாகிறது. 


இதையடுத்து இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமன்னா கலந்து கொள்ள, தயாரிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளாராம்.


வழக்கமாக நயன்தாரா தான் நடிக்கும் திரைப்படங்களின் எந்த  ஒரு விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார். இந்த வழக்கத்தை தற்போது தம்மன்னாவும் பின்தொடர்கிறார். எனவே விரைவில் இவருக்கு ரெட் கார்ட் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: