சென்னை;
வேண்டாங்க... வேண்டாங்க... என்று கெஞ்சியும் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக அந்த தொலைக்காட்சி செய்த செயல் இன்று ஒரு உயிரை பறித்துள்ளது.
சின்னத்திரைகளுக்கு தற்போது ஒரு பேய் பிடித்து ஆட்டுகிறது. டிஆர்பி என்ற அந்த வெறிப்பிடித்த பேயால் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.
பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதாவது குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சொன்னால் அதற்கு தீர்வு காணும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிதான் அது. பல நேரங்களில் நல்லது நடந்தாலும்... பர்சனல் விஷயங்கள் பப்ளிக்காகும் போது ஏற்படும் வேதனை இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பன் என்ற நபர் தன்னுடைய மனைவியின் தங்கைக்கும் அவரது பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நபர் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று பலமுறை தொலைக்காட்சி நிர்வாகத்திடமும் கெஞ்சிப்பார்த்துள்ளார். ஆனால் சேனல் நிர்வாகத்தினர் அதை ஒளிபரப்ப இதனால் மனவேதனை அடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்போது அவரது குடும்பத்தினர் நாகப்பன் மரணத்துக்கு காரணம் அந்த தொலைக்காட்சி தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டி.ஆர்.பி. முக்கியம்தான். அதற்காக உயிரை பறிக்கும் அளவிற்கு தேவையா?