நயன்-நமீ... காம்பினேஷனில் ஒரு படம்... வருது... வருது...

Sekar Tamil
சென்னை:
நயன்தாரா- நமீதா காம்பினேஷனில் ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும். பில்லா 1க்கு பிறகு அப்படி ஒரு படம் வருகிறது என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.


தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் உள்ளார் நடிகை நயன்தாரா.  இவர் எழுத்தாளர் பாலகுமார் இயக்கும் பொம்பள என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் நமீதா. உடல் எடை அதிகரிப்பால் படங்களில் நடிக்காமல் இருந்த நமீதா தற்போது எடையை குறைத்துள்ளார்.


தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நமீதா நடித்து வருகிறார். பரத்துடன் நடித்து வரும் பொட்டு படத்திலும் மந்திரவாதியாக நடித்துவருகிறார். இவரும் நயன்தாராவும் ஏற்கனவே பில்லா1 படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: