தள்ளி தள்ளி போகும்....தொடரி

Sekar Tamil
நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும், தனுஷின் 'தொடரி' திரைப்படம் வரும் செப்டம்பர் 2-ந்தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


ஆனால் தற்போது செப்டம்பர் 2-ந்தேதியும், இப்படம் வெளிவராதாம். ஏனெனில், 'தொடரி' திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், இன்னும் ரிலீஸ் வியாபாரங்களை முடிக்கவில்லையாம். 


நல்ல தொகைக்கு விற்க, விநியோகஸ்தர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்துள்ளதாம். 


எனவே இப்படம் செப்டம்பர் 16-ந்தேதி வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


'தொடரி' திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கினார். தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமைய்யா, ராதா ரவி, சதிஷ், ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.


Find Out More:

Related Articles: