சென்னை:
எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று நடிகை தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். யார் அந்த நடிகை தெரியுங்களா?
விஜய் நடித்த வேதாயுதம் படத்தில் அவரின் தங்கையாக கலக்கியிருந்தவர் நடிகை சரண்யா. இவர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
இந்நிலையில் இவர்களுக்கு நேற்று (24ம் தேதி) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். நாமும் வாழ்த்துவோம்... தாயும், குழந்தையும் நலமுடன் வாழ...