சென்னை:
சத்தியம் பண்ணு... அப்புறம் நடிக்க போ என்று கறார் காட்டியுள்ளார் உஷா ராஜேந்தர் என்று கோடம்பாக்கம் கோடங்கிகள் உறுமி அடிச்சு சொல்றாங்க...
தலைமுடியை கீழே இருந்து மேலே தள்ளி அடுக்கு மொழி வசனம் பேசி ஹிட் படங்களாக கொடுத்தவர் டி.ராஜேந்தர். இவரது வாரிசு சிம்பு ஆரம்பத்தில் அப்பா போல் பேர் எடுப்பார் என்று பார்த்தால் அவர் வம்பு மேல் வம்பாகவும், காதல் மேல் காதலாகவும் செய்து ரொம்ப...ப நல்ல பேரு எடுத்துட்டாரு...
இதுக்கு இடையில் அடுத்த வாரிசாக ’இது நம்ம ஆளு’ படம் மூலம் இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்தவர் சிம்புவின் தம்பி குறளரசன். இப்போ... இவர் அப்பா... அண்ணன் வழியில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கார்.
இங்குதான் நடந்துள்ளது ஒரு டுவிஸ்ட்... என்ன தெரியுங்களா? அவரது அம்மா, உஷா ராஜேந்தர், குறளரசனை அழைத்து பூஜை அறையில் அமர வைத்து ”நீ அப்பா போல் நல்ல பெயர் வாங்க வேண்டும். உன்னால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நன்றாக இருக்கவேண்டும். சத்தியம் செய்து கொடு” என்று கேட்டதாக ஒரு செய்தி கோலிவுட்டில் உலா வருகிறது.
சிம்பு செய்த வம்பால் மிகவும் நொந்து போய் இருப்பதால்தான் இப்படி சத்தியம் கேட்டாராம் உஷா. இதற்கு தன் அம்மாவிடம், ”நான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறேன்” என குறளரசன் வாக்குறுதி கொடுத்துள்ளாராம். பார்ப்போம் வாக்குறுதியை கடைசி வரை நிறைவேற்றுகிறாரா? இல்ல காற்றில் பறக்க விடுகிறாரா என்று.