புலியோ... எலியோ... ரசிகர்களுக்கு வேண்டும் காமெடி...

Sekar Tamil
சென்னை:
புலியுடன் மோதும் ஆக்சன் ஹீரோவாக வளர்ந்து விட்டார் சந்தானம் என்று கோலிவுட் கோவிந்துகள் சொல்றாங்க...


தில்லுக்கு துட்டு ஹிட் அடித்து சந்தானத்தை ஹீரோ அந்தஸ்தில் உயர்த்த இப்போ... சர்வர் சுந்தரம் பட ரீமேக்கில் மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஆகிய படங்களில் நடிக்கிறார். 


இதையடுத்து சந்தானம் புதுமுக இயக்குனனர் பச்சையப்பன் ராஜா என்பவர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில்தான் இவர் புலியுடன் மோதுவது போன்று செம ஆக்சன் காட்சிகள் இருக்காம். இதற்காக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வெளிநாட்டு வல்லுனர்களை அணுகி உள்ளனராம்.


கிராபிக்ஸ்சுக்காக மட்டும் 4 கோடி ரூபாயை இப்போதே ஒதுக்கி வைத்துவிட்டதாம் தயாரிப்பு தரப்பு. எப்படியே... புலியோடு மோதுறாரோ... இல்ல நம்மை கிலியாக்குறாரோ... சந்தானம் படம் என்றால் காமெடி இருக்கும் என்று நம்பும் ரசிகர்களை எலியாக்கிடாதீங்க... அம்புட்டுதான்...



Find Out More:

Related Articles: