ரெமோ... ரெங்கநாதன் (எ) மோகனாவாம்... வதந்தியா... உண்மையா?

Sekar Tamil
சென்னை:
ரெமோ... என்றால் ரெங்கநாதன் என்கிற மோகனாவாம்... இப்படி ஒரு டைட்டில் உலா வருது... இதனால் பரபரப்புதான் ஏற்பட்டுள்ளது.


அப்போ... தலைப்பை மாற்றுகிறார்களா என்ற கேள்விக்கு... இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஷயம் என்னவென்றால்... 


சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. படத்தின் புதிய டைட்டில் 'ரெங்கநாதன் என்கிற மோகனா' என்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக செய்திகள் பரவ... இல்ல... இல்ல... அது பொய் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனராம்.


வரிவிலக்கிற்காக டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று சொல்கின்றனர். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


Find Out More:

Related Articles: