'கபாலி' படத்திற்கு பிறகு இயக்குனர் ரஞ்சித் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க போகிறார் என்று முதலில் செய்திகள் வெளிவந்தது.
இதையடுத்து அவர் படத்தில் இளையதளபதி விஜய் நடிக்கவுள்ளார், உள்ளிட்ட பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது அவர் தனது அடுத்த படம் குறித்த முறையான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
''நான் தற்போது என்னுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறேன். கதை முழுவதும் தயாரானவுடன் என்னுடைய அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை நானே வெளியிடுவேன். நான் எந்த நடிகருடனும் இதுவரை கதை சொல்லவில்லை. அதனால் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்'' என அறிவித்துள்ளார்.