"தல" இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்... ரசிகர்கள் உற்சாகம்

Sekar Tamil
சென்னை:
"தல" இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலனாம்...  அட நாங்க சொன்னா ஐஸ் வைக்கிறோம் என்று சொல்வீங்க... அப்ப யார் சொல்லியிருக்காங்க என்று கேட்கிறீர்களா? 


இதோ விஷயத்துக்கு வருவோம்... தமிழ் சினிமாவில் "தல" க்கு பின்னால் இருக்கும் ரசிகர்களை எண்ணி மாள முடியாது. இவர் எதை செய்தாலும் அதை ட்ரண்ட் ஆக்கி விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.


இந்நிலையில் நேற்று அஜித்தின் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியானது. இதில் அஜித்தை இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் என வெளிநாட்டு பத்திரிகைகள் புகழ்ந்து இருந்தன.


அப்புறம் என்ன... உடனே தல-57 என்ற டாக் இந்திய அளவில் ட்ரண்ட் செய்துவிட்டுதான் "தல" ரசிகர்கள் ஓய்ந்துள்ளனர். நடத்துங்கப்பா... நடத்துங்க...


Find Out More:

Related Articles: