விட்டுக்கொடுத்த விஜய்... ரொம்ப பிடிக்கும்... சமந்தா...

Sekar Tamil
ஐதராபாத்:
மாஸ் ஹீரோ இதை ஒத்துக் கொண்டதால் எனக்கு அவரை ரொம்ப பிடித்தது என்று பரபரப்பு நாயகி சமந்தா தெரிவித்துள்ளார். இவருக்கு யாதை பிடித்ததாம்.


அவர் இளைய தளபதி விஜய்தான். விஜய், சமந்தா இருவரும் கத்தி, தெறி என்று ஹிட் படங்களில் நடித்த வெற்றி ஜோடி. இந்நிலையில் விஜய் பற்றி சமந்தா ஒரு பேட்டியில் கூறுகையில், எந்த ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.


ஆனால் தெறி படத்தில் தண்ணீரில் மூழ்கும் குழந்தையை என்னுடைய கேரக்டர்தான் போராடி காப்பாற்றும். இந்த காட்சிக்கு விஜய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதனால் எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி சும்மா தெறிக்க விட்டுள்ளார்...


Find Out More:

Related Articles: