'சேர்ந்து போலாமா' திரைப்படத்திற்கு பிறகு வினய் நடிப்பில் அடுத்து 'ஆயிரத்தில் இருவர்' திரைப்படம் வெளிவர உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வினய் அடுத்து ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... வேறு யாருமில்லை. நம்ம இயக்குனர் வெங்கடேஷ் தான்.
இயக்குனர் வெங்கடேஷ்
விஜய் நடித்த 'பகவதி', சரத்குமாரின் 'ஏய்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வெங்கடேஷ் தான், இந்த புது படத்தை இயக்க போகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு கனடாவில் நடைபெற இருக்கிறது.
மேலும், இதில் நடிக்கவுள்ள நடிகர்,நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.