மலையாள சேனல் பக்கம் பார்வையை திருப்பிய தேவயானி...

frame மலையாள சேனல் பக்கம் பார்வையை திருப்பிய தேவயானி...

Sekar Tamil
சென்னை:
காதல் கோட்டையில் கொடி நாட்டி சூரிய வம்சத்தில சக்கைபோடு போட்ட தேவயானி இப்போ மலையாள சேனல் பக்கம் டைவ் அடித்துள்ளார்.


காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் ஒன்றும் கிடைக்காது என்பது போல சினிமாவில் கொடிகட்டி பறந்த நாயகிகளில் தேவயானியும் ஒருவர். நாளாக நாளாக வெங்காய விலை போல இவரது மார்க்கெட்டும் குறைந்தது.


வாய்ப்புக்காக காத்திருந்தால் வயசுதான் ஆகும் என்று நினைத்தவர் சட்டென்று சீரியல் பக்கம் பார்வையை திருப்ப அங்கு ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் அதுவும் குறைந்தது. சரி இனி இங்கிருந்தால் பிழைப்பு நடத்த முடியாது என்று தற்போது மலையாள சேனல்கள் பக்கம் தாவியுள்ளார்.


அங்கு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் கலந்து கொள்கிறாராம். மலையாளத்தில் சொந்த தயாரிப்பில் ஒரு சீரியல் தயாரிக்க முடிவும் செய்துள்ளாராம். பார்த்து செய்யுங்கம்மா... எதை செய்தாலும் யோசித்து செய்யும்மா... என்று யோசனை தெரிவித்துள்ளனர். அவரது நலம் விரும்பிகள்.


Find Out More:

Related Articles:

Unable to Load More