எங்களுக்காக இல்லை... உங்களுக்காக ஆடை அணியுங்கள்...

Sekar Tamil
சென்னை:
நான் பசங்களுக்காக ஆடை அணிவதில்லை என்று போட்டாலும் போட்டார் ஒருபதிவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். என்னம்மா... இப்படி பண்ணீட்டீங்களேம்மா...


உலக நாயகனின் வாரிசு ஸ்ருதிஹாசன் எதை செய்தாலும் அதிரடியாகதான் போய் முடிகிறது. இவர் சமீபகாலமாக தனது ஆடை குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிடுகிறார். இது பல நேரங்களில் தைரியமான கருத்தாக இருந்தாலும் சில நேரங்களில் சர்ச்சையை கிளப்பி விடுகிறது. அப்படித்தான் இப்போதும் முடிந்துள்ளது. 


ஸ்ருத தனது இன்ஸ்டாகிராம் மூலம் போட்ட ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுங்களா? நான் எப்பொழுதும் பசங்களுக்காக ஆடை அணிவதில்லை. கடை ஜன்னலின் வழியாக நான் எப்படி இருக்கிறேன் என்பதை பார்க்கவே ஆடை அணிகிறேன் என்று தெரிவிக்க... ரசிகர்கள் கொந்தளித்து போய் பதில் பதிவிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். 


"அவங்க நமக்காக ட்ரெஸ் போடறதில்லை" ஆனா, உங்களுக்கா, சரியா ட்ரெஸ் போடுங்க. பொது இடத்தில், விழாக்களுக்கு, விருது விழாவில் என்று எங்கு பார்த்தாலும், ட்ரெஸ்சை சரி பண்ணிகிட்டே அலையுறது... உங்களுக்கு நல்லாவா இருக்கு" என்று ரசிகர்கள் பிடிபிடி என்று பிடிக்க ஆரம்பித்துள்ளனர். 



Find Out More:

Related Articles: