அப்படியா விஷால்... உண்மையை உரக்க சொல்லுங்க...

Sekar Tamil
சென்னை:
அவரிடம் சொல்லிவிட்டேன்... என் திருமணம் எப்போது என்று விஷால் சொன்னதாக இணையதளத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. 


விஷால், வரலட்சுமி இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி வெகுகாலமாக கோலிவுட்டை சுற்றி சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதுகுறித்து விஷால், வரலட்சுமி இதுவரை வாயை திறந்ததே இல்லை. ஆனால் விஷால் மட்டும் இலை மறை காயாக அவ்வப்போது இதுகுறித்து பூடகமாக பேசி வருகிறார். 


இந்நிலையில், ஒரு பேட்டியில் விஷால் சொன்னதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வருகிறது. என்ன தெரியுங்களா? வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன் என்று சொல்லியிருப்பதாக ஒரு முன்னணி தளத்தில் கொளுத்தி போட்டுள்ளனர். இது உண்மையா என்பதை விஷால்தான் சொல்லணும்... சொல்லணும்...



Find Out More:

Related Articles: