ராசி கைக்குடுக்குமா... சந்தானம் கிராப் எகிறுமா...!

Sekar Tamil
சென்னை:
ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரெஜினா இப்போ சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க போறார் என்ற செய்தி ஏற்கனவே தெரிந்த விஷயம். இப்ப அது இல்ல மேட்டர்?


அப்ப என்ன என்று கேட்கிறீங்களா? சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா நடித்த படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. அப்போ சிவகார்த்திகேயன் ரொம்ப பிரபலம் கிடையாது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்தியோட கிராப் எங்கேயோ போயிடுச்சு. 


சந்தானம் காமெடி நடிகராக பிரபலமாக வலம் வந்தாலும் ஹீரோவாக இப்போதுதான் பார்ம் ஆகி வருகிறார். தில்லுக்கு துட்டு படம் மட்டுமே அவரை சற்று உயர்த்தி உள்ளது. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம்-ரெஜினா நடிக்க இருக்காங்க. ரெஜினா ராசியால் சந்தானமும் "டாப்புக்கு" போவார் என்று ஒரு வதந்தி உலா வர ஆரம்பிச்சு இருக்கு. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...


Find Out More:

Related Articles: