நடுவுல கொஞ்சம்.... இயக்குனரின் அடுத்த அவதாரம்

Sekar Tamil
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்பட இயக்குனர் பாலாஜி தரணீதரன் தற்போது 'ஒரு பக்க கதை' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மற்றும் மெகா ஆகாஷ் இருவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.




இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், இன்னும் வெளிவராது உள்ளது. இந்நிலையில், இயக்குனர் பாலாஜி தரணீதரன் இந்த படம் இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளிவரும் என அறிவித்துள்ளார்.


மேலும் இப்படம் காதல் கதையாக உருவாகியுள்ளதாம். இதையடுத்து இயக்குனர் பாலாஜி தற்போது தனது அடுத்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.


மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முறையான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Find Out More:

Related Articles: