இனி இவர்தான் ரெமோ... விக்ரம் அறிமுகப்படுத்தினார்...

frame இனி இவர்தான் ரெமோ... விக்ரம் அறிமுகப்படுத்தினார்...

Sekar Tamil
சென்னை:
இனிமே அவர்தான்... அவரேதான் என்று மாஜி ரெமோ...புதிய ரெமோவை அறிமுகப்படுத்த விழாவே கலகலத்தது. எந்த விழா தெரியுங்களா?


இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், நிவின் பாலி உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்குதான் இருக்கு டுவிஸ்ட்...


விழாவில் சிவகார்த்திகேயன் மேடை ஏறும் போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் "ரெமோ" "ரெமோ" என்று கூச்சலிட்டனர். இதை கவனித்துக்கொண்டே இருந்த விக்ரம், மேடை ஏறியவுடன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் உண்மையான ரெமோ இனிமே சிவா தான், ரசிகர்கள் அவரை ரெமோ என்று கூப்பிடும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றாரே பாருங்கள். 


அந்நியன் படத்தில் விக்ரமின் ஒரு  கேரக்டர் ரெமோ. செம ஹிட் அடித்த அந்த பெயரைதான் தற்போது சிவகார்த்திகேயன் தன் பட தலைப்பாக வைத்துள்ளார்.



Find Out More:

Related Articles:

Unable to Load More