நடிகையுடன் வெளிநாடு செல்லும் விஜய் சேதுபதி

Sekar Tamil
விஜய் சேதுபதி நடித்துள்ள 'தர்மதுரை' திரைப்படத்தின் பாடல்கள் நாளை மறுநாள், அதாவது ஆகஸ்ட் 3-ந்தேதி வெளிவருகிறது என்பதை நாம் அறிந்தோம். 


இதையடுத்து அவர் ரத்ன சிவா இயக்கத்தில், 'றெக்க' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'காமன் மேன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் பாபு கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளது. 


இந்நிலையில் இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக விஜய் சேதுபதி மற்றும் ஹீரோயின் லட்சுமி மேனன் உள்பட படக்குழுவினர் அனைவரும் நாளை செவ்வாய் கிழமை பாங்காங்க் செல்லவுள்ளனர். 


இதையடுத்து இந்த படம் வரும் அக்டோபர் 7-ந்தேதி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என கூறப்படுகிறது.



Find Out More:

Related Articles: