விஜய்யின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா...

Sekar Tamil
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில், தனது 60-வதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு, தற்போது பாதிக்கு மேல் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவரவுள்ளது.


இந்நிலையில், விஜய் நடிக்கவுள்ள 61-வது திரைப்படம் குறித்து, பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து, விஜய் அடுத்து அட்லீ இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க போவதாகவும், இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுகுறித்த அதிகார பூர்வத்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Find Out More:

Related Articles: