விமர்சனத்தை ஏற்றால் வெற்றிதான்... "வாய்ஸ்" விட்ட தமன்னா

Sekar Chandra
சென்னை:
நான் விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதால்தான் எனக்கு வெற்றியும் எளிதாகிறது என்று வாய்ஸ் விட்டுள்ளார் இவர். 


யார் என்று கேட்கிறீர்களா? பாலில் குளித்த தேவதை போல் இருக்கும் தமன்னாதான். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்ப்போமா! “விமர்சனங்கள்தான் எனக்கு சொந்தம். வெற்றி என்பது கூட்டு முயற்சி. ஒரு படம் வெற்றி பெறும்போது நான் கர்வப் படமாட்டேன். ஆனால் என்னைப்பற்றிய விமர்சனங்களை முக்கியமாக எடுத்துக்கொள்வேன்.


விமர்சனங்கள் மூலம் தான் தவறுகளை சரி செய்ய முடியும். இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற உத்வேகமும் ஏற்படும். எனது வெற்றியின் ரகசியமும் இதுதான். தற்போது சினிமாவை பற்றி நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதாவது விமர்சனத்தை வைத்து தன் தவறுகளை திருத்திக் கொள்கிறாராம் தமன்னா. அப்படி செய்யுங்கள்... நல்லதே நடக்கட்டும்.


Find Out More:

Related Articles: