கலக்கத்தில் "கான்"கள்... சாதனைகள் முறியடித்த கபாலி

Sekar Tamil
சென்னை:
"கான்"கள் கலக்கத்தில் உள்ளனராம். காரணம்... கபாலி கொடுத்துள்ள செம வசூல் வேட்டைதானாம். முதல்முறையாக ஒரு தமிழ்படத்தை கண்டு டரியலாகி உள்ளனராம்.


சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த கபாலி பிரமாண்ட வசூல் சாதனை செய்து வருகிறது. பலரும் பலவித கருத்துக்களை சொன்னாலும் கபாலி வசூல் கிங் என்பதை யாராலும் மறுக்க முடியாது. படம் சரியில்லை என்றால் அதை அந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் புறக்கணித்துவிடுவார்கள். இது ரஜினிக்கே ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.


இந்நிலையில் கபாலி படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


இதுவரை ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் படங்களே எளிதாக ரூ 50 கோடி வசூலை தாண்டும். ஆனால் இதில் கபாலி லெவலே வேறு.


இப்படம் ஓவர்சீஸில் மட்டும் ரூ.80 கோடி ஓப்பனிங்கில் வசூல் செய்து அனைத்து கான் நடிகர்களையும் கலங்க வைத்துள்ளது என்பதுதான் உண்மை.



Find Out More:

Related Articles: