அம்மா வேடமா... ஐயகோ... பார்வையால் எரித்த நடிகை

Sekar Tamil
சென்னை:
பேமஸ் ஆக மட்டும் தமிழ் சினிமா வேணும்... மற்றபடி தமிழ் ரசிகர்கள் இளிச்சவாயர்கள் போல் இருக்கு. எதற்கு இந்த அங்கலாய்ப்பு என்று கேட்கிறீர்களா? விஷயத்தை பாருங்களேன்.


தமிழில் நடித்தால் அனைத்து "வுட்"களிலும் பேமஸ் ஆகி விடலாம் என்பதுதான் கோலிவுட்டின் மெகா ராசி. இங்கு இழுத்துப் போர்த்தி நடிக்கும் ஹீரோயின்கள் தெலுங்கோ, இந்தியோ என்றால் மட்டும் கிளாமரில் செம வெளுப்பு வெளுப்பார்கள். 


மற்ற மொழிகளில் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் நடிப்பவர்கள் இங்கு மட்டும் நடித்தால் ஹீரோயின் என்றுதான் அடம்பிடிப்பார்கள். இப்போ அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார் நடிகை பூமிகா. 


இந்தியில் தோனி அண்டோல்டு ஸ்டோரி படத்தில் அம்மா வேடத்தில் திறமைக்காட்டும் பூமிகாவுக்கு சில காட்சிகளைத் தவிர மற்றபடி நரைத்த தலைமுடியுடன் தான் கேரக்டர்.


சரி இந்தியிலேயே இப்படி நடிக்கிறாரே... என்று நம்ம தமிழ் இயக்குனர் ஒருவர் பூமிகாவை அணுகி ஒரு அம்மா வேடம் இருக்கு என்று சொல்ல கண்ணகிக்கு சொந்தக்காரர் போல அவரை பார்வையிலேயே எரித்து விட்டாராம். தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தெறித்து ஓடி வந்துள்ளார். இப்போ சொல்லுங்க இந்த நடிகைகளுக்கு இளிச்சவாயர்கள் தமிழ் ரசிகர்கள்தானே!


Find Out More:

Related Articles: