வாலாட்டி வதந்திகள்... இல்லை என்று நிரூபித்த சூர்யா...

Sekar Chandra
சென்னை;
பல வதந்திகள் வாலாட்டினாலும் அடுத்த படம் ரஞ்சித்துடன் என்று சொல்லாமல் சொல்கிறாராம் சூர்யா.


கபாலி பற்றி எதிர்பாராத விமர்சனங்கள் எழுந்தாலும் வசூலில் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் அடுத்து இயக்க இருந்தது சூர்யாவை. கபாலியின் நேர் எதிர்மறை விமர்சனங்களால் சூர்யா ரஞ்சித் படத்தில் நடிக்கலை என்று வதந்திகள் வாலாட்ட ஆரம்பித்தன. 


ஆனால் இதெல்லாம் பொய் என்பது போல் ‘எஸ்.3’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் சூர்யா, விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஞ்சித் படத்துக்காக பாக்சிங் கற்றுக் கொள்ள இருக்கிறாராம். இதற்காக, பாக்சிங் கோச் ஒருவரையும் நியமிக்க உள்ளாராம். இதனால் அடுத்த படம் ரஞ்சித்-சூர்யா கூட்டணிதான் என்று உறுதியாக முடிவாகி உள்ளதாக கோடம்பாக்கத்தினர் கூறுகின்றனர்.


Find Out More:

Related Articles: