நாளுக்கு ரூ. 2லட்சம் சம்பளம்... இது கோலிவுட் கணக்கு

Sekar Chandra
சென்னை:
நடித்தால் ஹிட்... இந்த ராசியால் இப்போ இவர் காட்டில் பணமழைதான் போங்க என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். அவர் யார் தெரியுங்களா?


வாங்க தெரிஞ்சுக்கலாம். இப்போ வரும் படங்களில் கதையை தேடுறாங்களோ... இல்லியோ... ரசிகர்கள் முதலில் தேடுவது மொட்டை ராஜேந்திரனைதான். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் தான். இவரது கரகர குரலும் பாடி லாங்வேஜீம் ரசிகரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டன. என்ன ஒரு ரசனை பாஸ்.


கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்த சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படத்தில் ரசிகர்கள் சந்தானத்தின் நடிப்பை பாராட்டினார்களோ... இல்லையோ... மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரத்தை வெகுவாக ரசித்தார். இப்போ இவர் காட்டில் பட மழையால் பண மழை கொட்டுகிறது. இவர் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம், சிறு பட்ஜெட் படம் என்றால் ரூ.1 லட்சம் வாங்குகிறாராம் நலல மனதுடன். எப்பூடி? 


Find Out More:

Related Articles: