கபாலி திரைப்படம் ... சிறப்பு அஞ்சல் உறை விற்பனை

Sekar Tamil
சென்னை:
கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறை விற்பனையை அஞ்சல் துறை தொடக்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


கபாலி திரைப்படம் நாளை (22ம் தேதி) வெளியாகிறது. இதற்காக தனி விமான சேவைக்கு ஏர் ஏசியா விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.


இதேபோல் கர்நாடக அஞ்சல் வட்டம், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் ஆகியவை இணைந்து கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன நாங்களும் உள்ளேன் அய்யா என்று சொல்லியுள்ளன.


சென்னை, பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் படு வேகமாக செய்யப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு அஞ்சல்தலை சேமிப்பு மையங்களிலும் கபாலி சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: