தெறி 100வது நாள் தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்

Sekar Chandra
சென்னை:
ஒரு பக்கம் கபாலி கொண்டாட்டம் என்றால் மறுபக்கம் தெறிக்க விட்டுள்ளனர் தளபதி ரசிகர்கள். 


விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தெறி படம் அனைவரையும் தெறிக்க விட்டது வசூலில் அள்ளியது அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் ரூ.150 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.


இந்த படம் இன்றுடன் 100வது நாளை கடக்கிறது, இதை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் காமென் "டிபி" வைத்துள்ளனர். அதுமட்டுமா... டுவிட்டரிலும் இந்திய அளவில் தெறியை ட்ரண்ட் செய்து வருகின்றனர்.


THERI HITS CENTURY என்ற டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து விட்டனர். ஒரு பக்கம் இப்படி ஒரு தரப்பு ரசிகர்கள் கொண்டாட மற்ற ரசிகர்கள் பேனர், போஸ்டர் அடித்து கலக்கி வருகின்றனர். கபாலி, தெறி இரண்டு படங்களின் தயாரிப்பாளர் தாணுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தாணுவின் வசூல் கொடிதான் இப்ப உயரே பறக்கிறது.


Find Out More:

Related Articles: