அமெரிக்காவிலும் சாதனை படைத்த "கபாலி" 2 மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டும் காலி

Sekar Chandra
சென்னை:
நம்ம நாடு மட்டுமின்றி அமெரிக்காவிலும் கபாலி தன் வெற்றிக் கரங்களை தட்டி வருகிறார். ஆமாங்க அமெரிக்காவிலும் கபாலி படம் சாதித்து வருகிறது. என்னன்னு பார்ப்போமா?


அமெரிக்காவில் ‘கபாலி’ படம் 2 மணி நேரத்தில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. வரும் 22-ந் தேதி உலகமெங்கும் இந்த படம் வெளியாகிறது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


‘கபாலி’ படம் அமெரிக்காவிலும் வெளியாகிறது. இதுவரை எந்த தமிழ் படங்களும் இல்லாத அளவுக்கு அங்கு 400 திரையரங்குகளில் படம் வெளியாவது ஒரு சாதனை என்றால் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிய 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிட்டது அடுத்த சாதனை. அமெரிக்காவிலும் கபாலி... கபாலிதான்டான்னு நிரூபிச்சு இருக்கார்.


Find Out More:

Related Articles: