10 இடத்தில் "கட்" போட்டதால் கபாலிக்கு "யூ" சர்ட்டிபிகேட்?

frame 10 இடத்தில் "கட்" போட்டதால் கபாலிக்கு "யூ" சர்ட்டிபிகேட்?

Sekar Chandra
சென்னை:
ரிலீஸ் ஆகி முடிஞ்சாலும் கபாலி பீவர் குறையாது போலிருக்குது. அப்படி சாதனை மேல் சாதனையாக செய்தாலும் சென்சாரில் சில சோதனைகளை கபாலி படம் சந்தித்துள்ளதாக செய்திகள் பரபரக்கின்றன.


சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் வரும் 22ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் வியாபாரம் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தாணுவை உச்சத்தில் இந்த படம் ஏற்றி வைக்கும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.


இந்த படத்திற்கு யூ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. ஆனால் இதற்காக கிட்டத்தட்ட 10 காட்சிகள் வரை "கட்" செய்தால்தான் இந்த சர்ட்டிபிகேட் கிடைக்கும் என்று சென்சார் போர்டு கெடுபிடி காட்டியதாம். இயக்குனர் ரஞ்சித் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கெடுபிடி தளரவில்லையாம்.


பிறகு கட் விழுந்த பிறகு தான் யு சான்றிதழ் கிடைத்ததாக கூறுகின்றனர். உண்மையா? இது உண்மையா?


Find Out More:

Related Articles:

Unable to Load More