வில்லன் ஆவாரா? நல்ல நண்பர்கள் வில்லன்கள் ஆவார்களா?

Sekar Chandra
சென்னை:
நல்ல நண்பர்கள் ஒருவருக்கொருவர் வில்லன் ஆவார்களா? ஆவார்கள். அது நம்ம கோலிவுட்டில் கண்டிப்பாக நடக்கும். என்ன விஷயம்ன்னா!


தனுஷ், விஜய் சேதுபதி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதனால்தான் நானும் ரவுடி தான் படத்தை விஜய்சேதுபதி நடிக்க தனுஷ் தயாரித்தார் என்பது தெரிந்த செய்தி. ஆனால் புது செய்தி இதுதான். இப்போது தனுசையும், விஜய் சேதுபதியையும் மோதிக்கொள்ள செய்ய ஏற்பாடு நடக்குதாம்.


தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று வெற்றிமாறன் கருதுகிறாராம். இதனால் முதலில் ஜீவாவிடம் பேசியுள்ளனர். ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியிடம் பேசி வருகிறார்களாம். வில்லன் ஆவாரா? இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். 


Find Out More:

Related Articles: