சென்னை:
பறக்கிறார் "தல" பறக்கிறார் "தல" பல்கேரியாவிற்கு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
வேதாளம் படத்திற்கு பிறகு ஆபரேஷனுக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்த "தல" பிறகு ரெஸ்டில் இருந்தார். இதற்கிடையில் அவர் சிவா படத்தில் நடிக்க உள்ளார் என்று உறுதியானது. இதற்காக திரைக்கதையை செம்மைப்படுத்தினார் சிவா.
சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை எளிமையாக நடந்தது. ஆடி மாதத்திற்கு முன்பே பூஜை போட்டு முடித்தனர். இந்நிலையில் இந்த
படத்தின் படப்பிடிப்பு வரும் ஆக.1 அல்லது 2ம் தேதி தொடங்கும் என்று கூறுகின்றனர். இதற்காக "தல" வரும் 26ம் தேதி பல்கேரியா பறக்கிறார்.
இந்த படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு மட்டும்தான் சென்னையில் நடக்குமாம். மீதி படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில்தானாம். இந்த படத்தில் வெகு ஸ்டைலிசான "தல"யை பார்க்கலாம் என்று சொல்கின்றனர்.