நாங்களும் லிஸ்ட்டுல வந்துட்டோம்... டாப் 5ல் தனுஷ், ஸ்ருதிஹாசன்தான்

Sekar Chandra
சென்னை:
லிஸ்ட்டுல வந்துட்டோம் என்று தனுஷ், ஸ்ருதிஹாசன் 2 பேரும் என்ட்ரி கொடுத்து இருக்காங்க... என்ன புது படத்தில் சேர்ந்து நடிக்கிறாங்களா என்று கேட்காதீங்க.


இது வேற விஷயம். சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்வது என்பது தற்போது நடிகர், நடிகைகளின் பெரிய அளவிலான விருப்பமாக உள்ளது. தங்கள் படங்கள் பற்றி, தங்களின் புகைப்படங்கள் என்று பதிவேற்றி வருகின்றனர்.


இதில் தனுஷ், ஸ்ருதி இருவருமே சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஒரு சாதனை படைத்துள்ளனர். என்னன்னா? தனுஷை டுவிட்டரில் இதுவரை 3 மில்லியன் நபர்கள் பாலோ செய்கின்றனர்.


ஸ்ருதிஹாசனை 4 மில்லியன் நபர்கள் பாலோ செய்கின்றனர். இதன் மூலம் தென்னிந்தியாவிலேயே அதிகம் பாலோவர்ஸ் கொண்ட பிரபலங்களின் டாப்-5 லிஸ்டில் இவர்கள் இடம்பிடித்துவிட்டனர். ஓகே... சூப்பர்... வாழ்த்துக்கள்.


Find Out More:

Related Articles: