திறமையால் வெளிச்சம் பெற்ற 10 பாலிவுட் நடிகர்கள்...

Sekar Chandra
ராதிகா அப்டே 


பெங்காலி, தமிழ், மராத்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களில், உணர்ச்சிமிக்க கதாப்பாத்திரங்களில் நடித்தவர் ராதிகா அப்டே. ஹண்டர் பாடலாப்பூர் திரைப்படத்தில், தனது நடிப்பை முழுமையாக காட்டி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.


பூமி பெட்னிகர் 


கடந்த 2015-ம் ஆண்டு, டும் லக  கே ஹேஷா திரைப்படத்தில், ஆயுஷ்மான் குரான்னாவிற்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமான பூமி பெட்னிகர்  இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புகழ் பெற்றுள்ளார். 



மனு ரிஷி 


ஒய் லக்கி லக்கி ஒய்  திரைப்படத்தில் நடித்து பிரபலமான மனு ரிஷி, இந்த படத்தில் இவரது நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது... மேலும் இவர் நிறைய படங்களில் நடிக்க வாழ்த்துக்கள்.


தாஹிர் ராஜ் பாஸின் 


மதுரானி திரைப்படத்தில், ராணி முகர்ஜிக்கு வில்லனாக  நடித்த தாஹிர் ராஜ் பாஸின் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவரது வில்லத்தன நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.


சர்வீன் சாவ்லா 


ஹாட் ஸ்டோரி 2 திரைப்படத்தில் நடித்து, பிரபலமான சர்வீன் சாவ்லா... தனது முழுநடிப்பு திறமையையும் இந்த படத்தில் காண்பித்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.



ஆனந்த் திவாரி


தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விளம்பரத்தில் நடித்து பிரபலமான ஆனந்த் திவாரி. இந்த விளம்பரத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் பெற்றார். இவரது நடிப்பு கோ கோவா கோன் திரைப்படத்தில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


மனிஷ் சவுதிரி 


சொச்ச நா தா மற்றும் ராக்கட் சிங் திரைப்படத்தில் நடித்து பிரபலமான மனிஷ் சவுதிரி தற்போது அப்பா ரோலில் நடித்து வருகிறார். இவரது திறமை மேலும் வெளியே தெரிய வாழ்த்துக்கள்.


அபிமன்யு சிங் 


குலால் திரைப்படம் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்த அபிமன்யு சிங் ஆகும். இந்த படத்திற்கு பிறகு பிஸியான நடிகராக அபிமன்யு திகழ்ந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.


நவீன் கௌஷிக் 


'ராக்கட் சிங்' திரைப்படத்தில்  முதன்மை விற்பனையாளராக நடித்த நவீன் கௌஷிக் திறமை மிக்க நடிகராவார். ஆனால் இந்த படத்திற்கு பின், இவருக்கு சரியான படவாய்ப்புகள் வரவில்லை. வருங்காலத்தில் இவர் திரைப்பட வாய்ப்புகள் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


குல்ஷான் தேவைய்யா


கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து, தனக்கு அடையாளம் கொடுக்கும் வண்ணம் நடிப்பவர் குல்ஷான் தேவைய்யா. இவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிகின்றன. 



Find Out More:

Related Articles: