இரண்டே நாட்களில் இருமுகன்....

Sekar Chandra
விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'இருமுகன்' திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவல்கள் வந்துள்ளன.


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இந்த படத்தில் உருவான 'ஹெலெனா' என்ற பாடலின் டீசர் வரும் ஜூலை 16-ந்தேதி, இரவு 7 மணிக்கு வெளிவருகிறது. மேலும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இருமுகன் திரைப்படத்தில், விக்ரம் இரண்டு தோற்றத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் ரொமான்டிக் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.



Find Out More:

Related Articles: