சசிகுமாரின் கிடாரி திரைப்படத்தில் கவுதம் மேனன்

Sekar Chandra
'வெற்றிவேல்' திரைப்படத்திற்கு பிறகு சசி குமார் நடிப்பில் 'கிடாரி' திரைப்படம் உருவாகி வருகிறது. பிரஷாந்த் முருகேசன் இயக்கும் இந்த படத்தை சசிகுமாரே தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 


இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் ''தலைகாலு புரியலை'' என்ற பாடல், நாளை மறுநாள், அதாவது ஜூலை 15-ந்தேதி  வெளியாகிறது. இந்த பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிடுகிறார். 


கிடாரி திரைப்படத்திற்கு தற்புக சிவா இசையமைத்துள்ளார். இதில் ஹீரோயினாக நிகிலா நடித்துள்ளார். இவர் 'வெற்றிவேல்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த படத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ளார்.



Find Out More:

Related Articles: