ஷங்கர் படத்தில் நீலாம்பரி....

frame ஷங்கர் படத்தில் நீலாம்பரி....

Sekar Chandra
'படையப்பா' திரைப்படத்தில் ரஜினிக்கு சவால் விட்டு நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் இந்த படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்து பிரபலமானார் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம். 


இதையடுத்து, 'படையப்பா' திரைப்படத்திற்கு பிறகு ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்திராத நிலையில், தற்போது ஷங்கர் இயக்கும் '2.0' திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். 


இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 


மேலும் அமெரிக்காவில் தற்போது ஓய்வு மேற்கொண்டு வரும் ரஜினி, இந்த மாத இறுதியில் இந்தியா திரும்பியதும் '2.0' திரைப்படத்தில் நடிக்கத் தொடங்குவார் என கூறப்படுகிறது.



Find Out More:

Related Articles:

Unable to Load More