கமலின் நாயகியோடு விவேக்...

Sekar Chandra
காமெடி நடிகர் விவேக் 'நான் தான் பாலா', 'பாலக்காட்டு மாதவன்' உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம். இதையடுத்து அவர் தற்போது 'துப்பறியும் சுந்தரம்' திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். 


இந்த படத்தில் கதாநாயகியாக கமலினி முகர்ஜீ நடிக்க தேர்வாகியுள்ளார். இவர் கமல் நடித்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமலினி முகர்ஜீ


மேலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், படப்பிடிப்பு குறித்த செய்திகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Find Out More:

Related Articles: