தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவராக திகழ்பவர் நா.முத்துக்குமார். இவர் 'வீர நடை' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பிறகு, இதுவரை 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
இவர் இரண்டு முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல புத்தகங்களை இயற்றியுள்ளார். இவரது படைப்பில், 'சில்க் சிட்டி', 'பாலா காண்டம்', 'என்னை சந்திக்க கனவில் வராதே' உள்ளிட்ட பல புத்தகங்கள் உருவாகியுள்ளன.
சினிமாவில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நா.முத்துக்குமார் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
மேலும் தமிழ் ஹெரால்டு சார்பில் முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.