டோலிவுட்டில் பிற நடிகர்களுக்காக டப்பிங் பேசிய 11 நடிகர்களின் ஆய்வு இதோ...

Sekar Chandra
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் சிலர், பிற நடிகர்களுக்காக டப்பிங் பேசியுள்ளார். அது குறித்த ஆய்வை நாம் ஒன்று ஒன்றாக பார்க்கலாம்.. 


1.நாரா ரோஹித் 


தெலுங்கு நடிகர் நாரா ரோஹித் இதுவரை 15 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஒரு படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இவர் ஸ்வாமி ரா ரா திரைப்படத்தில் நடித்த நடிகருக்கு டப்பிங் பேசியுள்ளார்.

2. ரவி தேஜா 


தெலுங்கு ஹீரோ ரவி தேஜா பல திரைப்படங்களில் நடித்தாலும், மர்யாதா ராமண்ணா மற்றும் டூஸ்க்கேல்தா ஆகிய இருதிரைப்படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார். 


3. மகேஷ் பாபு 


பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஜால்சா மற்றும் பாட்ஷா ஆகிய இருதிரைப்படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


4. ராஜ் தருண் 


தனது சினிமா வாழ்க்கையில், ராஜ் தருண் இருமுறை டப்பிங் பேசியுள்ளார். அப்பாயிதோ அம்மாயி மற்றும் லக்ஷ்மி ராவே மா இண்டிகோ ஆகிய இருதிரைப்படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.


5. ஜூனியர் என்.டி.ஆர் 


பிரபல நடிகரும், சிறந்த டான்சருமான ஜூனியர் என்.டி.ஆர், ராம ராமா கிருஷ்ண கிருஷ்ணா திரைப்படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். 


6. ராம் பொத்தினேனி 


ரே திரைப்படத்தில் நடித்த ராம் பொத்தினேனி, இந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு டப்பிங்கும் பேசியுள்ளாராம்.


7. அல்லாரி நரேஷ் 


பிற நடிகர்கள் நடித்த பப்பு, பீமிலி, வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அலறி நரேஷ் குரல் கொடுத்துள்ளார். 


8. சுனில் வர்மா 


சுனில் வர்மா, பிற நடிகர்கள் நடித்த கோபாலா கோபாலா, நுவ்விலா, ரேஸ் குர்ராம், கிக் 2, ஜாபர்டாஸ்க்,  சீமா தப்பகை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.


9. நாணி 


பல திரைப்படங்களில் தற்போது நடித்து வரும் நாணி, 'டொப்பிடி' திரைப்படத்தில் நடித்த நடிகருக்காக டப்பிங் பேசியுள்ளாராம். 


10. பிரபாஸ்


பாஹுபலி ராஜா பிரபாஸ் டெனிகைன ரெடி திரைப்படத்திற்காக குரல் கொடுத்துள்ளாராம். இது நம்ப முடிகிறதா...


11. சிரஞ்சீவி 


தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ருத்ரமாதேவி மற்றும் வருது, ஹனுமான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்களுக்கு  டப்பிங் பேசியுள்ளார். முன்னணி நடிகர் டப்பிங் பேசியிருக்கிறார் என்று கேள்விப்படுவது அதிசயமாக தான் இருக்கிறது...


Find Out More:

Related Articles: