கபாலி பேருல மராத்தான்... செம ஓட்டம் ஓடுவாங்கல்ல...

frame கபாலி பேருல மராத்தான்... செம ஓட்டம் ஓடுவாங்கல்ல...

Sekar Chandra
சென்னை:
இவரு பேரை சொன்னால அதிரும். இப்ப இந்த பேருல எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக மராத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்து இருக்காங்க.


'கபாலி' படம் பற்றி அலுக்க சலிக்க பல செய்திகளை சொல்லியிருக்கோம். இந்த படம் வரும் 22ம் தேதி வெளியாகுது. இதுவரை இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்கள் கூட கண்டிராத வகையில் வானத்திற்கும் பூமிக்கும் படத்தோட புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன.


ஒரு பக்கம் ஏர் ஆசியா வானத்துல கபாலியை பறக்க விட்டா... ஃபைவ் ஸ்டார் சாக்லேட், ஏர்டெல் ஆகியவை பூமியில் புரமோஷன்களை இதுவரை யாரும் செய்யாத அளவில் செய்து இருக்கு. இப்போ இன்னொரு வித்தியாசமான புரமோஷன் கிடைச்சிருக்கு. என்ன தெரியுங்களா?


'கபாலி' பெயரில் தற்போது மாரத்தான் போட்டி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டு இருக்காங்களாம். வரும் 31-ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ள இந்த மாரத்தான் போட்டி ஆண்கள், பெண்கள், என தனித்தனியாக நடக்குதாம். 


உலகிலேயே ஒரு திரைப்படத்தின் பெயரில் மாரத்தான் போட்டி நடத்தப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் யாரு அவரு... கபாலி...


Find Out More:

Related Articles:

Unable to Load More