உலகம் முழுவதும் சுல்தான் வசூல்... 320 கோடி ரூபாய்...

Sekar Chandra
புதுடில்லி:
சுல்தான்... சுல்தான்... என்று உலகமே கிறங்கி போய் கிடக்குதாம். உலகம் முழுவதும் ‘சுல்தான்’ திரைப்படம் வசூல் செய்த அமௌண்ட் எவ்வளவு தெரியுங்களா? 


உலகம் முழுவதும் 320 கோடி ரூபாய்க்கு மேல் குவித்து வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாச்சுங்க.


முதல்நாள் மட்டும் சுமார் 40 கோடி ரூபாயை அள்ளியது. ரிலீசான மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை அள்ளோ... அள்ளுன்னு வசூலித்த இந்த படம் ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’, ‘பேன்’ ஆகிய படங்களில் முந்தைய வசூல் சாதனையை முறிச்சே போட்டுடுச்சு.


அதுமட்டுமா முன்னாடி வசூல் சாதனை செய்த தன்னோட படமான ‘பிரேம் ரடன் தன் பாயோ’ படத்தோட வசூல் ரெக்கார்டையும் இப்ப இவரே முறியடிச்சு இருக்கார்ன்னா பார்த்துக்கோங்க. இப்ப உலகம் முழுவதும் 320 கோடி ரூபாய்க்கு மேல் குவித்து வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்குங்க... அப்ப வசூல் கிங்... சல்மான்தானே... இந்த கல்லா கட்டுறது இன்னும் தொடருமாம்... என்னமோ போங்க.


Find Out More:

Related Articles: