சந்தானத்திற்கு திருப்புமுனை தருமா 'தில்லுக்கு துட்டு'

frame சந்தானத்திற்கு திருப்புமுனை தருமா 'தில்லுக்கு துட்டு'

Sekar Chandra
சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். அடுத்து ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் நாயகனாக நடித்தார். ஆனால் இரண்டு படங்களும் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.


இருந்தாலும் தன்னுடைய ஹீரோ முயற்சியை விடாமல், 'தில்லுக்கு துட்டு' படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் 7ம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை சந்தானம் இன்று நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் இருப்பதற்குக் காரணமாக இருந்த 'லொள்ளு சபா' டிவி  நிகழ்ச்சியின் இயக்குனரான ராம்பாலா இயக்கியுள்ளார்.


‘தில்லுக்கு துட்டு’ படமும் ஏறக்குறைய 'லொள்ளு சபா' மாதிரியாகத்தான் இருக்கும். படத்தில் பேய்களையே கிண்டலடிக்கும் நாயகனாக சந்தானம் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் ராம்பாலா படம் பற்றி கூறுகையில், " இந்தப் படம் வழக்கமான பேய்ப் படங்களில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும். சந்தானத்திற்கு இந்தப் படம் நிச்சயம் திருப்புமுனையைக் கொடுத்து, அவரை வேறு ஒரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்" என்கிறார்.



Find Out More:

Related Articles:

Unable to Load More