சென்னை:
என்னோட மகள் கேட்கறதுக்கு என்னால பதில் சொல்ல முடியலைங்க... முடியலைங்க என்று லகலக அடித்துள்ளார் இவர். யார்?
வேறு யாரு... சிவகார்த்திகேயன்தான். இவரது ரெமோ படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள நிலையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போதுதான் இந்த "லக லக" தெரிய வந்து இருக்கு. என்ன விஷயம்ன்னா?
சிவகார்த்திகேயனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கு. இந்த குழந்தைக்கு ரெமோ டீசர் ரொம்ப பிடிக்குமாம். அதனால தினமும் சிவகார்த்திகேயனிடம் அவர் மகள் அந்த அம்பு உங்கள் மீது பட்டவுடன் ரெமோ ஆன்ட்டியாக மாறிடுவீங்களாப்பா கேட்டுக்கிட்டே இருக்காம். என் மகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியலைன்னு சிவகார்த்திகேயன் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் ரெமோவில் நர்ஸ் கெட்டப்ல நீங்க சூப்பர் பிகரா இருக்கீங்க சாரே...!