இசையில் உச்சம் தொடும் அனிருத்... சர்வதேச ஆல்பம் வெளியிடறாரு...

Sekar Chandra
சென்னை:
வர்றாரு....வர்றாரு... அனிருத் சர்வதேச ஆல்பம் வெளியிட வர்றாரு என்று உள்ளூர் குருவில் தகவலை சொல்லியிருக்குங்க.


சிம்புவின் "பீப்" பாடல் சர்ச்சையால் எங்கும் தலைக்காட்டாமல் படங்களின் இசையமைப்புக்காக வெளிநாட்டிலேயே இருந்தார் அனிருத். அப்போது அந்த பிரச்னை எல்லாம் ஓய்ந்துள்ள நிலையில் அவர் செம மகிழ்ச்சியாக இருக்கிறாராம். என்னன்னு விசாரிச்சதுல இதுவரைக்கும் அவ்வப்போது தனிப்பட்ட இசை ஆல்பங்கள் வெளியிடுறது, லைவ் கான்சர்ட்ஸ் என்று இருந்தவர் முதல்முறையா விரைவில் சர்வதேச இசை ஆல்பம் வெளியிட இருக்காராம்.


இதற்காக அமெரிக்கா தயாரிப்பாளரும், பாடல் ஆசிரியருமான டிப்லோவுடன் ஒப்பந்தம் போட்டு இருக்கார் அனிருத். இதை  டிப்லோ தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ட்விட்டர் செய்தி நம்ம நாட்டு புகழ் கொடியை சர்வதேச அளவிற்கு அனிருத் ஏற்றியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.


இப்போ ரம், ரெமோ, தல 57 உட்பட பல தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்து வந்தாலும்... அந்த ஆல்பத்திற்காகவும் கடுமையாக உழைக்கிறாராம் அனிருத். இது... இதைத்தான் உங்க ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க பாஸ்...



Find Out More:

Related Articles: