ஒல்லிபிச்சான் நடிகரின் தோட்டா படம் முடியும் நிலை

Sekar Chandra
சென்னை:
படத்தோட தலைப்பை போலவே படப்பிடிப்பும் கிடுகிடு வென்று முடிந்துவிட்டதாம். யாரோட படம் தெரியுங்களா?


ஸ்டைலிஸ் இயக்குனர் ஒல்லிப்பிச்சான் நடிகரை வைத்து எடுத்து வந்த தோட்டா தலைப்பு படம்தான் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
வம்பு நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டே ஒல்லிபிச்சான் நடிகரையும் வைத்து படம் இயக்கினார் இயக்குனர்.


யார் கண்பட்டதோ...வம்பு நடிகர் வழக்கம் போல் தன் வேலையை காட்டி விட்டார். இதனால் படப்பிடிப்புகள் தேக்கம். ஆனால் ஒல்லிபிச்சான் நடிகரோ படு பாந்தமாக நடித்து கொடுத்ததில் படம் ஏறத்தாழ முடிந்தே விட்டதாம். 


 மூன்று வாரம் படப்பிடிப்பு நடந்தால் அப்புறம் படம் போஸ்ட் புரொடக்சனுக்கு தயாராகிவிடும். இது எப்படி இருக்கு? ஒரு படம் தேங்கினால் அடுத்த படம் முடிந்தே விடும் போல் உள்ளதே!


Find Out More:

Related Articles: