"சிங்க கர்ஜனை" போல் இருந்தது... லைக்கா ராஜீ "ட்வீட்"

Sekar Chandra
சென்னை:
சிங்கம் கர்ஜித்தது போல் இருந்தது. இது ஒன்றே போதும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க என்று ட்விட்டி உள்ளார் ஒருவர். யார் தெரியுங்களா?


சமீபத்தில் ஒட்டு மொத்த சினிமா உலகையும் அதிர வைத்தது ரஜினி உடல்நிலை குறித்த செய்தி. ஆனால் இந்த வதந்திகளுக்கு அவரது குடும்பத்தினர் முற்றுப்புள்ளி வைத்தனர்.


இந்நிலையில் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவன கிரியேட்டிவ் ஹெட் ராஜீ மகாலிங்கம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படி பதிவு ஒன்று செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி என்னை போனில் அழைத்தார்.


அவர் பேசியது சிங்கம் கர்ஜித்தது போல் இருந்தது. அவரைப்பற்றிய வதந்திகளுக்கு இதுவேதான் முற்றுப்புள்ளி. மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். சிங்கம் என்றும் சிங்கம்தாங்க.... 


Find Out More:

Related Articles: